search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அடிப்படை வசதி"

    • பள்ளி மாணவர்களுக்கான அடிப்படை வசதிகளை காலத்தோடு செய்ய தவறிவிட்டது.
    • சீருடை, நோட்டு, புத்தகம் வழங்கும் பணியும் இதுவரை முழுமைபெறமால் உள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முன்னாள் கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன், நிருபர்களிடம் கூறியதாவது:- புதுச்சேரி மாநிலத்தை மத்திய பாஜக அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. அதேபோல், புதுச்சேரியை ஆளும் என்.ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக அரசு காரைக்காலை அனைத்து வகையிலும் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. குறி ப்பாக சொல்லப்போ னால், மாநிலம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கான அடிப்படை வசதிகளை காலத்தோடு செய்ய தவறிவிட்டது. மாணவ ர்களுக்கான ஒரு ரூபாய் பஸ் வசதி முற்றிலும் கிடையாது.

    சீருடை, நோட்டு, புத்தகம் வழங்கும் பணியும் இதுவரை முழுமைபெறமால் உள்ளது. நகர் மற்றும் கிராமப்புற சாலைகள் போக்கு வரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. முதல் கட்டமாக, புதுச்சேரி அரசின் கல்வித்துறையின் அலட்சியப்போக்கை கண்டித்து, காரைக்காலில், மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சந்திரமோகன் தலைமையில் ஓரிரு நாளில், காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அல்லது, கல்வித்துறை அலுவலகத்தை காங்கிரஸ் கட்சி, ஒத்த கருத்துடைய அனைத்து கட்சிகளுடன் இணைந்து முற்றுகை போராட்டத்தை நடத்த உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

    • செட்டிபாளையம் சாலையில் தனியார் மண்டபத்திலும் பகுதி நகரசபை கூட்டங்கள் நடைபெற்றது.
    • பொதுகழிப்பறையை சுகாதாரமான முறையில் அமைத்து தர வேண்டும்.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சியில் வார்டு எண் - 2 சேடபாளையம் நியாய விலை கடை அருகிலும், வார்டு எண் - 3 டி. இ.எல். சி பள்ளி வளாகத்திலும், வார்டு எண் - 5 ல் குலாலர் அங்காளம்மன் கோயில் மண்டபத்திலும், வார்டு -13 ல் செட்டிபாளையம் சாலையில் தனியார் மண்டபத்திலும் பகுதி நகரசபை கூட்டங்கள் நடைபெற்றது. இந்த கூட்டங்களுக்கு நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையாளர் விநாயகம், முன்னிலை வகித்தார். நகராட்சி பொறியாளர் ஜான்பிரபு, வருவாய் ஆய்வாளர் பிரகாஷ், சுகாதார ஆய்வாளர் சங்கர், அலுவலக மேலாளர் சண்முகராஜா, தலைமை எழுத்தர் சசிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டங்களில், அந்தந்த வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு அடிப்படைப் பிரச்சினைகளான குடிநீர் விநியோகம், தெருவிளக்கு, தார் சாலை, உள்ளிட்டவற்றை தீர்க்கக்கோரி கோரிக்கை மனுக்களை அளித்தனர். பொதுமக்கள் தரப்பில் கொடுத்த கோரிக்கை மனுக்கள் விபரம் வருமாறு:-

    வார்டு எண்3ல் நாரணாபுரம் பகுதிக்கு புதிய ரேசன் கடை அமைத்தல் மற்றும் அங்கன்வாடி மையத்திற்கு சுற்றுச்சுவர் அமைத்தல், பொதுமக்களுக்கு விளையாட்டு மைதானம் அமைத்தல், பொதுகழிப்பறையை சுகாதாரமான முறையில் அமைத்து தர வேண்டும். வார்டு எண்.2ல் அங்கன்வாடி மையம் அருகில் குப்பைகளை கொட்ட அனுமதிக்கூடாது. சேடபாளையம்,தண்ணீர்பந்தல் முதல் அருள்புரம் வரை செல்லும் நெடுஞ்சாலை துறைக்கான தார் சாலையை அகலப்படுத்திட வேண்டும். சேடபாளையம் பள்ளி அருகில் வேகத்தடை அமைக்க வேண்டும். சேடபாளையம் பகுதியில் தெருநாய் தொல்லை இல்லாமல் செய்ய வேண்டும்.வார்டு எண்.5ல் டி.எம்.டி நகர் பகுதியில் மழைநீர் வடிகால் அமைத்தல் மற்றும் பெயர் பலகை அமைத்தல், மண் சாலையை தார் சாலையாக மாற்ற வேண்டும். தெரு நாய் தொல்லையை அகற்ற வேண்டும்.

    அரசு கல்லூரி எதிரே பஸ் நிறுத்துமிடத்தில் பஸ்கள் நின்று செல்ல வேண்டும். அம்மாபாளையம் பிரிவில் பேருந்து நிழற்குடை அமைக்க வேண்டும். மங்கலம் சாலையிலிருந்து ராயர்பாளையம் பகுதி வரை பி.ஏ.பி. வாய்க்கால் மண்பாதையை தார் சாலையாக மாற்றி தர வேண்டும். வார்டு எண் 13ல் செட்டிபாளையம் சாலை பாலாஜி நகர் பகுதியில் ரேசன் கடை புதியதாக அமைக்க வேண்டும். அருள்ஜோதி நகர்,ராஜ கணபதி நகர் பகுதியில் தெருநாய் தொல்லைக்கு நிவர்த்தி செய்ய வேண்டும். கோவை -செட்டிபாளையம் சாலை சந்திப்பில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் உள்ளிட்ட குடிநீர் வசதி, மழை நீர் வடிகால் வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    • காளையார் கோவில் யூனியன் விட்டனேரி ஊராட்சியில் அடிப்படை வசதி செய்ய நிதி ஒதுக்க வேண்டும்.
    • மாவட்ட நிர்வாகத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் கவிஞர் வரதன் கோரிக்கை விடுத்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட விட்டனேரி ஊராட்சியில் அடிப்படை வசதி செய்வதற்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் கவிஞர் வரதன் கோரிக்கை விடுத்தார்.

    அவர் கூறுகையில், இந்த ஊராட்சி நிதி பற்றாக்குறையில் இயங்குவதால் மக்கள் பணிகள் உடனே செய்து முடிக்க முடியாத சூழல் நிலவுகிறது. இன்னும் அடிப்படை தேவைகளே நிறைவேற்றப்படாத எங்கள் ஊராட்சியின் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அரசு உதவ வேண்டும்.

    ஊராட்சிக்கு தேவை யான அடிப்படை வசதி களை செய்வதற்கு கடந்த 1 வருடமாக அரசு நிதி ஒதுக்காததால் அடிப்படை பணிகள் பாதிக்கப்பட்டு ஊராட்சி நிர்வாகம் முடங்கி உள்ளது.ஊராட்சி களுக்கு மக்கள் தொகை அடிப்படையில் 14-வது நிதிக்குழு மானியம், ஒப்படைக்கப்பட்ட வருவாய் மானியம் மற்றும் மாநில நிதிக்குழு மானியத்தை அரசு வழங்குகிறது. இதை கொண்டு பணியாளர் சம்பளம், குடிநீர் விநியோகம், பொது சுகாதாரம், தெருவிளக்கு மற்றும் கழிவறை பராமரிப்பு உள்பட பல்வேறு பணிகள் செய்யப்படுகிறது.

    மழைக்கு முன்பு கிராமத்தில் வாறுகால் வசதி ஏற்படுத்த, சேதமடைந்த சாலைகளை மேம்படுத்த, குடிநீர், சுகாதார பணிகள் உள்பட அடிப்படை வசதிகளை ஊராட்சியில் ெசய்ய அரசு ஒதுக்கீடு வேண்டி பல முறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை.

    அடிப்படை வசதி செய்வதற்கு நிதி ஒதுக்காததால் சிரமமாக உள்ளது. எனவே நிதி ஒதுக்க வேண்டும்.விட்டனேரி ஊராட்சியில் சாலை மற்றும் திட்டப்பணிகள் கேட்டு கொடுக்கப்படுகின்ற மனுக்கள் நிதி இல்லை என்று திரும்பி வந்துவிடுகிறது. எந்த கட்சியும் சாராத சமூக ஆர்வலரான செயல்படும் நான் மக்களை எப்படி எதிர் கொள்வது என்ற சூழலும் நிலவுகிறது.

    எனவே எங்கள் ஊராட்சியின் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அரசு உதவ வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

    • குடிசை மாற்று வாரியம் சார்பாக 30 குடும்பங்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டு குடி அமர்த்தி வைத்தனர்.
    • அடிப்படை வசதிகளும் செய்து தருவதாக உறுதியளித்திருந்தனர்.

    வீரபாண்டி :

    திருப்பூர் காசிபாளையம் ஆற்றங்கரையோரம் வசித்து வந்த பொதுமக்களுக்கு குடிசை மாற்று வாரியம் சார்பாக முதலிபாளையம் பிரிவு வஞ்சியம்மன் நகர் பகுதியில் சுமார் 30 குடும்பங்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டு குடி அமர்த்தி வைத்தனர். இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக அங்கு குடிநீர், மின்சாரம், சாக்கடை கால்வாய் வசதி மற்றும் போக்குவரத்து வசதிகள் இன்றி தவித்து வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர்கள் நேற்று திருப்பூர் நல்லூர் 3 மண்டல அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

    அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது ;-

    திருப்பூர் காசிபாளையம் ஆற்றங்கரையோரம் இருந்த 30 குடும்பங்களுக்கு குடிசை மாற்று வாரியம் சார்பாக முதலிபாளையம் பிரிவு வஞ்சியம்மன் நகர் பகுதியில் குடியிருப்பதற்காக இடம் கொடுத்தனர். அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தருவதாக உறுதியளித்திருந்தனர். ஆனால் தற்போது வரை எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை. மின்சாரம் இல்லாததால் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் படிக்க முடிவதில்லை இரவு நேரங்களில் பாம்பு தொல்லை அதிகரித்துள்ளது. பள்ளி மற்றும் மருத்துவம் சார்ந்த விஷயங்களுக்காக 3 கிலோமீட்டர் சென்று வர வேண்டி உள்ளது. குடிநீர் வசதி இதுவரை செய்து தரவில்லை. இது போன்ற பல்வேறு பிரச்சினைகளுடன் வாழ்ந்து வருகிறோம். எங்கள் பிரச்சினையை பலமுறை தெரிவித்தும் மாநகராட்சி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மண்டல அதிகாரியிடமும், மண்டல தலைவரிடமும் தெரிவித்தும் எந்த ஒரு பயனும் ஏற்படவில்லை. தொடர்ந்து இதே நிலை நீடித்தால் ஊர் மக்கள் ஒன்றிணைந்து சாலை மறியலிலும், பெரும் போராட்டங்களிலும் ஈடுபடுவோம் என்றனர்.

    • 3வது மண்டல குழு கூட்டம் நல்லூர் மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது.
    • 10 கவுன்சிலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 3வது மண்டல குழு கூட்டம் நல்லூர் மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. மண்டல குழு தலைவர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். உதவி கமிஷனர் வாசுகுமார் முன்னிலை வகித்தார். 3வது மண்டலத்துக்கு உட்பட்ட 10 கவுன்சிலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் 44- வது வார்டு மாமன்ற உறுப்பினரும் , மாநகராட்சி எதிர்க்கட்சி கொறடாவுமான கண்ணப்பன் பேசியதாவது :- 44-வது வார்டு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். ஆனால் அங்கு போதிய குடிநீர் வசதி இல்லை. எனவே 44-வது வார்டில் கூடுதல் கவனம் செலுத்தி குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.அதேபோல் துப்புரவு பணிகள், சாலை பணிகள் , தெருவிளக்கு பழுது நீக்கம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும். மேலும் காய்ச்சல் பரவல் அதிக அளவில் உள்ளது.

    சுகாதார பாதுகாப்பு மற்றும் மருத்துவ பரிசோதனையை உரிய வகையில் மேற்கொள்ள வேண்டும். வார்டு பகுதிகளில் ஏராளமான வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் உரிய நிதி ஒதுக்கீடு எதுவும் இதுவரை வரவில்லை என பேசினார். இதேபோல் கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் உள்ள குறைகளை எடுத்துக்கூறி பேசினர்.

    • டி. புதுப்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • பள்ளிக்கு சுற்று மதில் சுவர் கட்டுவதற்காக ரூ.22லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள டி.புதுப்பாளையம் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ளது. இப்பள்ளி 2010ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உய ர்த்தப்பட்டு தற்போது 310 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இது குறித்து அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்தப் பள்ளியில் சுற்று மதில் சுவர் வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, செய்துதரக்கோரியும் பள்ளியில் குப்பை கொட்டுவதாகவும் பள்ளியை சுற்றி முட்புதர்கள் மண்டி  உள்ளதாகவும் பள்ளியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு சமூகவிரோத செயல்கள் நடைபெறுவதாகவும் பள்ளி வழியாக ஆடு, மாடுகள், டிராக்டர்கள் உள்ளிட்ட அனைவரும் இவ்வழியாக செல்வதால் பள்ளி மாணவ மாணவிகள் படிப்பதற்கு இடையூறுகள் உள்ளதாக கூறி கிராம பொதுமக்கள் உயர்நிலைப் பள்ளியின் முற்றுகைப் போராட்டம் செய்தனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறியதா வது:- கடந்த வருடம் ஜூன் மாதம் 6-ந்தேதி உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறை மூலம் பள்ளிக்கு சுற்று மதில் சுவர் கட்டுவதற்காக ரூ.22லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதுநாள் வரை அதற்கான பணிகள் நடைபெறவில்லை. மாவட்ட கலெக்டர் சுற்று மதில் சுவர் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மேலும் பள்ளியில் குடிநீர் வசதி கழிவறை வசதி குப்பைகளை அகற்றி சுகாதாரமாக வைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீசார்பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி மேல் அதிகாரிகளிடம் கூறி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் கலைந்து சென்றனர்.

    • கீழக்கரையில் அடிப்படை வசதி கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • வீரகுல தமிழர் படை நகர அமைப்பாளர் கீழை பிரபாகரன் கலந்து கொண்டு பேசினார்.

    கீழக்கரை

    கீழக்கரையில் மக்களுக்கு அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்றக் கோரி ஜனநாயக கூட்டமைப்பு சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர தலைவர் பாஷித் அலி தலைமையில் நகராட்சி அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

    கீழக்கரை நகராட்சியில் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுவதாகவும், சுகாதாரம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாகவும், தெரு விளக்குகள் இருந்தும் மின் விளக்குகள் எரியாததை கண்டித்தும், கீழக்கரை மருத்துவமனையில் கூடுதல் வசதிகள் செய்யக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    வீரகுல தமிழர் படை நகர அமைப்பாளர் கீழை பிரபாகரன் கலந்து கொண்டு பேசினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைச் செயலாளர் தாரிக், பொருளாளர் ஹபீப், ம.ஜ.க. இப்ராஹிம், எஸ்.டி.பி.ஐ. மேற்கு நகர தலைவர் அசரப், தொகுதி செயற்குழு உறுப்பினர் சாதிக்அலி, மக்கள் செய்தி தொடர்பாளர் சத்யராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.

    • குடிநீர், தார்ரோடு, சாக்கடை போன்ற அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்பட்டு வருகிறோம்.
    • பாறைகுழியை மூடியதற்கு பிறகு குப்பை கழிவுகளை எங்கே கொட்டுவது என்று திண்டாடி வருகிறோம்.

    திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு வட்டம் அங்கேரிப்பாளையம் எம்.எஸ்.எம். மணி நகரில் வசிக்கும் பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-எங்கள் பகுதியில் குடிநீர், தார்ரோடு, சாக்கடை போன்ற அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்பட்டு வருகிறோம்.

    எங்கள் பகுதியில் இருந்த பாறைகுழியை மூடியதற்கு பிறகு குப்பை கழிவுகளை எங்கே கொட்டுவது என்று திண்டாடி வருகிறோம். தெருக்களில் மாநகராட்சி சார்பில் குப்பைத் தொட்டியும் அமைக்கப்படவில்லை. குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படுகிறது. சாலைகள் பள்ளம் மேடாக உள்ளது. வாகனங்களில் செல்ல முடியவில்லை. இப்படியாக கடந்த 15 வருடங்களாக அவதிப்பட்டு வருகிறோம். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிட்ம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. ஆகவே இந்த பகுதியில் போதிய அடிப்படை வசதிகளை செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • ஸ்ரீ செந்தில் நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
    • ஸ்ரீ செந்தில் நகர் பகுதிக்கு தார்சாலை, குடிநீர், சாக்கடைகால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம்,திருப்பூர் ஒன்றியம்,இடுவாய் ஊராட்சிக்குட்பட்ட சீரங்ககவுண்டம்பாளையம் அருகே ஸ்ரீசெந்தில் நகர் உள்ளது. இப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    ஸ்ரீ செந்தில்நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாக வந்து இடுவாய் ஊராட்சி மன்ற அலுவலகத்தில், இடுவாய் ஊராட்சி மன்றத்தலைவர் கே.கணேசனிடம் ஸ்ரீ செந்தில் நகர் பகுதிக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தரக் கோரி கோரிக்கை மனுவை வழங்கினர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, இடுவாய் ஊராட்சிக்குட்பட்ட ஸ்ரீசெந்தில் நகர் பகுதிக்கு தார்சாலை வசதி,குடிநீர் வசதி,சாக்கடைகால்வாய் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.மேலும் ஸ்ரீ செந்தில்நகர் பிரிவு அருகே வளைவுப்பகுதியில் வேகத்தடை அமைத்துத்தர வேண்டும்.ஸ்ரீ செந்தில் நகர் பகுதியில் உள்ள் ஸ்ரீ காரியசித்தி விநாயகர் கோவிலுக்கு மின்இணைப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும்,அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தரக்கோரியும் கோரிக்கை மனுவை வழங்கினர்.

    பின்னர் மனுவை பெற்றுக்கொண்ட இடுவாய் ஊராட்சி மன்றத்தலைவர் கே.கணேசன்,ஸ்ரீ செந்தில்நகர் பொதுமக்களிடம் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

    ×